மாஸ்டர், வலிமை குறித்து செம்ம மாஸ் அப்டேட்..!

Default Image

நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அஜித்தின் வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர், அனிருத் இசையில் உருவான இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த படத்தின் அடுத்த அப்டேட்காக ரசிகர்கள் அனைவரும் காத்துள்ளார்கள் இந்நிலையில் தற்பொழுது கிடைத்த தகவல் இந்த மாஸ்டர் திரைபடம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதைபோல் நடிகர் அஜித் குமார் தற்பொழுது இயக்குனர் எச்.வினோத் குமார் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்,இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடிக்கவுள்ளார், மேலும் இந்த படத்தில் ஜான்வி கபூர், மேற்றும் நடிகர் கார்த்திகேயாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

மேலும் படத்தை போனிகபூர் தயாரிக்கிறார், மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்