மாஸ்டர் பட நாயகி ஹேப்பி.! காரணம் என்ன தெரியுமா.!
தனது சகோதரர் பத்திரமாக ஊருக்கு திரும்பியது தனக்கு நிம்மதியை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
அறிமுகமான முதல் படமே சூப்பர் ஸ்டாரின் படத்தில் வாய்ப்பு கிடைத்தவர் தான் மாளவிகா மோகனன். கடந்தாண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படத்தில் மாளவிகா மோகனன் அவர்கள் சசிகுமாரின் மனைவியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் அவர் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. நடித்த இரண்டு படங்களிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதற்கு காரணம் இவரது கவர்ச்சியான போட்டோஷூட் தான் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
சமீபத்தில் ஊரடங்கு காரணமாக லண்டனில் தனது சகோதரர் ஊருக்கு வர இயலாமல் தனியாக இருப்பதாகவும், தேவையான பொருட்கள் கூட வாங்க இயலாமல் கஷ்டப்படுவதாகவும், அதனால் தான் கவலையில் உள்ளாகியுள்ளதாகவும் கூறி மாளவிகா மோகனன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருந்தார். தற்போது ஒரு சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு விமான சேவைகள் இயங்கியதை அடுத்து சகோதரர் இந்தியா வந்தடைந்ததாகவும், ஆனால் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது படி, அவர் ஓட்டலில் தங்கியுள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறியுள்ளார். மேலும் தனது சகோதரர் பத்திரமாக ஊருக்கு திரும்பியது தனக்கு நிம்மதியை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.