லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, கைதி வில்லன் அர்ஜுன் தாஸ், நடிகை மாளவிகா மோகன் மற்றும் சாந்தனு, ஆண்ட்ரியா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள். இதுவரை மூன்று போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்பை தூண்டியது. காதலர் தினத்தன்று மாஸ்டர் படத்தில் இருந்து விஜய் பாடிய குட்டி ஸ்டோரி என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இது இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்தது. இதனிடையே படத்தின் படப்பிடிப்புகள் பெருபாலும் முடிவடைந்ததாகவும், இன்னும் 10 நாட்களில் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிடும் என்று படக்குழு தெரிவித்தது.
அதன்பிறகு படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகளை இயக்குனர் தொடங்க இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. இதற்கிடையில் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. விஜயின் முந்தைய படங்கள் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் உரிய அனுமதி பெறுவது தொடர்பாக பல்வேறு சர்ச்சை எழுந்தன. இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுதொடர்பாக நடிகர் சாந்தனு, அண்மையில் கல்லூரி விழா ஒன்றில் பங்கேற்று பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் இசை வெளியீட்டு விழா நடக்கும் இடம் குறித்து ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…