வாத்தி கம்மிங் ஒத்து – இன்று வெளியாகிறது மாஸ்டர் மூவி அப்டேட்.!

Default Image

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது .

கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி போன இந்த படத்தின் ரிலீஸ் தேதி திரையரங்குகள் திறந்த பின்னரும் இன்னும் அறிவிக்கப்படவில்லை . ஆனால் களத்தில் சந்திப்போம்,பிஸ்கோத், இரண்டாம் குத்து,சூரரை போற்று, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்கள் தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ளது .

அதனுடன் தனுஷின் ஜகமே தந்திரம் படத்திலிருந்து ஒரு பாடலும் , ஈஸ்வரன் படத்திலிருந்து டீசரும் ,அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் என பல படங்களின் அப்டேட்கள் ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக வெளியிடப்பட உள்ளது . இந்த நிலையில் தளபதி ரசிகர்கள் மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியிட வாய்ப்பு உள்ளதாக ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி வந்தனர்.

இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் அப்டேட் ஒன்றை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . அதனுடன் பின்னணி இசையுடன் கூடிய வீடியோவையும் வெளியிட்டுள்ளனர் . எனவே மாஸ்டர் படத்தின் டீசர் அல்லது ரிலீஸ் தேதியை தீபாவளிக்கு வெளியிடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala