மாஸ்டர் பிளானில் காத்திருக்கும் ‘மாஸ்டர்’ படக்குழு.!

சுமார் ஆறு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் போது, 50 சதவீத இருக்கைகளுடன் படம் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டாலே கண்டிப்பாக ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவார்கள் என மாஸ்டர் படக்குழு நம்பிக்கையில் உள்ளனர்.
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் மற்ற வேலைகள் அனைத்தும் முடிந்து படம் ஏப்ரலில் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மார்ச் மாதமே திரையரங்குகள் மூடப்பட்டதால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி போய் கொண்டே வைக்கிறது.
இந்நிலையில், அண்மையில் சூர்யா நடிப்பில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் OTT தளத்தில் வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. இதனைத்தொடர்ந்து மாஸ்டர் படக்குழுவினரின் அடுத்தகட்ட நகர்வு என்ன என பலரும் சிந்தித்து வருகின்றனர்.
மாஸ்டர் பட படக்குழுவினரிடம் அமேசான், நெட் நெட்ஃபிளிக்ஸ் போன்ற OTT தளங்கள் விலை பேசி வருவது உண்மைதான். ஆனால், அவர்களுக்கு பச்சை கொடி காட்டாமல் மாஸ்டர் படக்குழு இருந்து வருகிறதாம்.
இதற்கு காரணம் அண்மையில், கொரோனா தோன்றிய சீனாவில் ஊரடங்கிற்கு பின்னர் தியேட்டர் திறக்கப்பட்டு ஒரு திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படம் இதுவரை இல்லாத அளவு வசூல் மழையில் மாபெரும் வெற்றி அடைந்ததுள்ளது. அதுவும் 50% இருக்கை அனுமதியுடன்.
இதே போல தமிழகத்திலும் 50 சதவீத இறக்கைகள் உடன் திரையரங்கு திறக்க அனுமதிக்கப்பட்டால் உடனே மாஸ்டர் திரைப்படத்தை வெளியிடலாம் என்ற முடிவில் மாஸ்டர் படகுழு உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.
சுமார் ஆறு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் போது, 50 சதவீத இருக்கைகளுடன் படம் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டால் கண்டிப்பாக ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவார்கள் என படக்குழு நம்பிக்கையில் உள்ளனர். இதனால்தான் OTT தளங்களுக்கு மாஸ்டர் படகுழு இன்னும் பச்சை கொடி காட்டாமல் இருந்து வருகிறது என சினிமா வட்டாரத்தில் சிலர் தெரிவித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025