டிஜிட்டல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு நபர் மாஸ்டர் படத்தை காப்பி செய்து இணையத்தில் கசியவிட்டுள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர்.
இன்னும் பொங்கலையொட்டி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படம் இணையத்தில் வெளியானது. இதனால் அதிர்ச்சில் ஆழ்த்த படக்குழுவினர், யார் யாரிடமெல்லாம் படத்தின் காப்பியை கொடுத்தோம் என விசாரிக்க தொடங்கினர்.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் காப்பியை, வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக, டிஜிட்டல் நிறுவனம் ஒன்றிடம் கொடுத்துள்ளனர். அந்த டிஜிட்டல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு நபர், இந்த படத்தை திருட்டுததனமாக பதிவு செய்து, இணையத்தில் கசிய விட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, அந்த நபர் மீது காவல்துறையில் புகார் அளிக்க, படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில், ட்வீட்டர் நிறுவனமும் குற்றவாளியை கண்டுபிடிக்க உதவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக அமைந்துள்ளது.…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி 1 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் பி பிரிவின் லீக் ஆட்டத்தில், லாகூரின் கடாபி மைதானத்தில்…
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று காஞ்சிபுரம் மாவட்டம் பூஞ்சேரியில் நடைபெற்றது.…
சென்னை : மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய தவெக…