மாஸ்டர் படத்தில் சிறிய வயது விஜய்சேதுபதியாக நடித்த மகேந்திரன் ரசிகர் ஒருவர் தனுஷை பற்றி கேட்டதற்கு அசுரன் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது அசுர நடிப்பால் தற்போது உச்சத்தில் இருக்க கூடிய நடிகர்களில் ஒருவர் தனுஷ். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாசு படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் கர்ணன் படம் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்நது D43 திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு அமெரிக்காவிற்கு சென்று தி க்ரே மேன் படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதற்கு பிறகு நானே வருவேன், D44 , ஆயிரத்தில் ஒருவன் 2, வடசென்னை 2, ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். தனுஷிற்கு மிக பெரிய வெற்றி படமாக இருக்கும் திரைப்படங்களில் ஒன்று அசுரன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்த படத்தின் மூலம் அணைத்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தனுஷை நடிப்பின் அசுரன் என்று கூறிவருகிறார்கள்.
அந்த வகையில் மாஸ்டர் படத்தில் சிறிய வயது விஜய்சேதுபதியாக நடித்த மகேந்திரன் தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது செல்லப்பிராணிகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் அதில் ஒரு ரசிகர் ஒருவர் தனுஷை பற்றி கேட்டதற்கு அசுரன் என்று கூறியுள்ளார். இவர் தற்போது D43 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த புதிய வரி விதிப்பு தான் தற்போது உலக நாடுகளில் தலைப்பு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு புதிய வரிகளை அறிவித்தார். இதில்…
கோவை : மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை குடமுழுக்கு நடைபெறும் நிலையில் ரூ. 4 இலட்சம் மதிப்பிலான…
சென்னை : இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது…
பெங்களூர் : இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தில் இருந்த…
சென்னை : நேற்றைய தினம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த…