முதலில் தியேட்டரில்,பின்னரே அமேசான் பிரேமில் வெளியாகும் மாஸ்டர்.! மாஸ்டர் படக்குழுவினர் திட்டவட்டம்.!
விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் படத்தினை பொங்கலன்று தியேட்டரில் தான் முதலில் வெளியாகும் என்றும்,அதன் பின்னரே அமேசான் பிரேமில் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன்,சாந்தனு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது .இதில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார்.
தீபாவளி தினத்தன்று மாஸ்டர் படத்தின் டீசர் சன் தொலைக்காட்சியின் யூடுயூப் சேனலில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதுடன் , இந்திய அளவில் அதிக லைக்குகளை பெற்ற டீசர் என்ற சாதனையையும் படைத்தது.
ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த மாஸ்டர் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.சமீபத்தில் படத்தினை ஓடிடி-யில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக கூறப்பட்ட நிலையில்,அதனை மாஸ்டர் படக்குழு மறுத்தது .இந்த நிலையில் சமீபத்தில் திரையரங்குகளை 50% இருக்கைகளுடன் இயங்க அனுமதி வழங்கியதை தொடர்ந்து ரிலீஸ்க்கு தயாராக இருந்த சில படங்கள் தியேட்டரில் வெளியாகியது.
ஆனால் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.இந்த நிலையில் தற்போது மீண்டும் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதாவது மாஸ்டர் படத்தினை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் வாங்கியுள்ள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து மாஸ்டர் படக்குழுவினர் கூறியுள்ளதாவது , மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக முதல் திரையரங்குகளில் தான் வெளியாகும் ,அதாவது பொங்கலுக்கு மாஸ்டர் படத்தினை தியேட்டரில் வெளியிட உள்ளதாகவும் ,அதன் பின்னரே ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . அதிலும் மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் அல்லாமல் அமேசான் பிரேமில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனை கொண்டாடும் விதமாக தளபதி ரசிகர்கள் டுவிட்டர் பக்கத்தில் #MasterOnlyOnTheaters என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.