தனுஷுடன் இணையும் மாஸ்டர் பட நடிகை.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தனுஷுடன் நடிகை மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக தகவல்.
நடிகர் தனுஷ் அவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தின் ரகிட ரகிட என்ற பாடல் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது, மேலும் வெளிவந்து இரண்டு நாட்களிலே பல மில்லியன் பார்வையாளர்களை பெற்று வருகிறது, மேலும் அதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டனர்.
இந்த நிலையில் அடுத்தாக ஹிந்தியில் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார், மேலும் தனுஷ் பிறந்த நாளிற்கு சினிமா பிரபலங்கள் பலர் தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர், அந்த வகையில் நடிகை மாளவிகா மோகனனும் தனது வாழ்த்தை தெரிவித்தார்.
மேலும் மாளவிகா மோகனன் “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தனுஷ் சார். அற்புதமான ஆண்டு வரவிருக்கிறது. உங்களோடு பணிபுரிய ஆவலாக உள்ளேன். என்றும் விரைவில் யாரேனும் நம் இருவரையும் ஒரே படத்துக்குத் தேர்வு செய்வார்கள் என்று நம்புகிறேன்” என்று பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் இதற்கு பதிலளித்த நடிகர் தனுஷ் நன்றி விரைவில் நடக்கும் என நான் நினைக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார், இதனால் அடுத்ததாக நடிகை மாளவிகா மோகனன் தனுஷ்க்கு ஜோடியாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)