நடிகர் விஜய் நடிப்பில் ஒருவாகியுள்ள படம் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறகிறது. இதில் குட்டிகதை மூலம் விஜய் அரசியல் பேசுவாரா என எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
காரணம் நடிகர் விஜய் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ, அங்குதான் அவர்களை உட்கார வைக்க வேண்டும் என்று பேசினார் அப்போது விஜயின் இந்த பேச்சு வைரலாக மாறியது. மேலும் அவர் யாரை குறிப்பிடுகிறார் என்று விவாதங்களும் அனல் பறந்தன.
விஜய் ஆளுங்கட்சியை தான் கூறுகினார் என்றும்,அவர் அரசியலுக்கு வருகிறார் என்று அரசியல் களங்களால் அப்போது கணிக்கப் பட்டன.தற்போது விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இந்தப் படத்தில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து உள்ளார். நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக களமிரங்கியுள்ளார்,நடிகை ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், நாசர் உள்ளிட்டோர் பல முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை, சேவியர் பிரிட்டோ தயாரித்து உள்ளார்.
இன்று நடைபெறும் இசை வெளியீட்டு விழாவானது விஜய்யின் முந்தைய படங்களைப் போல் இருக்காது என கூறப்படுகிறது.மேலும் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு கூட அனுமதி இல்லையாம், படக்குழுவினர் மட்டுமே கலந்து கொள்ளும் விழாவாக திட்டமிடப் பட்டுள்ளது.
நேற்று வெளியான “வாத்தி ரெய்டு பாடல்” வெளியானதை தொடர்ந்து இவ்விழாவில், விஜய் என்ன பேசப் போகிறார் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. சமீப காலமாகவே தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசும் விஜய் இந்த விழாவிலும் அரசியல் பேசுவாரா? என்று ஆவலுடன் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர் .
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…