மாநாடு திரைப்படத்தின் மாஸான அப்டேட்..!!
மாநாடு படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு நாளை முதல் தொடங்கப்படவுள்ளதாக தகவல்.
நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் .
இந்த படத்திற்கான டீசர் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் நாளை மாநாடு படத்திற்கான கடைசி கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பவுள்ளதாகவும், இன்னும் 6 நாட்களில் படத்திற்கான மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று கூறப்படுகிறது.