திரு. யுவன் ஷங்கர் ராஜா பாடலுக்கு அரேன்ஜ்மென்ட்ஸ் செய்து கொண்டிருக்கிறார். மற்றபடி வெளியீடு எப்போது என்பது தயாரிப்பாளர்கள் தான் சொல்ல வேண்டும், எனக்கு அதில் அதிகாரமில்லை என்று கூறியுள்ளார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். YSR புரொடக்ஷன் கீழ் யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு என். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகிய மூவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.கடந்த 2019ஆம் ஆண்டே இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அனைத்தும் முடிவடைந்தது. ஆனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று வரை முடிவு செய்யப்படவில்லை. ஒரு சில நேரங்களில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, அடுத்து ஒரு சில பிரச்சினைகளால் தள்ளி போய் கொண்டுள்ளது. தற்போது இந்த படத்தை வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளும் படக்குழுவினர் எடுத்து வருவதாகவும், விரைவில் படம் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இயக்குனரான சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தை குறித்து கூறுகையில், மாமனிதன் திரைப்படத்தில் நான்கு பாடல்களும் மற்றும் RR இசைஞானி இளையராஜா முடித்து விட்டார், திரு. யுவன் ஷங்கர் ராஜா பாடலுக்கு அரேன்ஜ்மென்ட்ஸ் செய்து கொண்டிருக்கிறார். மற்றபடி வெளியீடு எப்போது என்பது தயாரிப்பாளர்கள் தான் சொல்ல வேண்டும், எனக்கு அதில் அதிகாரமில்லை என்று கூறியுள்ளார்.
சென்னை : மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக ஆளும் திமுக அரசு…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…