சுல்தான் படத்தின் டிரைலர் குறித்த மாஸ் அப்டேட்..!!
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படத்தின் டிரைலர் வருகின்ற 21 ஆம் தேதி வெளியீட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்
நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு, நெப்போலியன், ராமச்சந்திரன் ராஜூ, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கான புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இதனை தொடர்ந்து இன்று மாலை 5.30 மணிக்கு இந்த படத்தில் இடம்பெற்றுள்ள “எப்படி இருந்த நாங்க” என்ற பாடல் வெளியாகவுள்ளது.
இந்த அப்டேட்டுகளை தொடர்ந்து அடுத்ததாக டிரைலர் அப்டேட் தான் வருகிறதாம். ஆம் அந்த அப்டேட் குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என்றும் படத்திற்கான டிரைலர் வருகின்ற 21 ஆம் தேதி வெளியீட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.