விக்ரம் ரசிகர்களுக்கு கோப்ரா படம் குறித்த மாஸ் அப்டேட்.!!

Default Image

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தை மே மாதம் இறுதியில் அல்லது ஜூன் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படங்களில் ஒன்று கோப்ரா.ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் விக்ரம் ஏழு வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த படத்தை இமைக்கா நொடிகள் என்ற வெற்றி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்க 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தியில் உருவாகும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் மும்மரமாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் தற்போது கோப்ரா படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது விக்ரம் ஏழு வேடங்களில் நடித்துள்ள கோப்ரா படத்தினை மே மாதம் இறுதியில் அல்லது ஜூன் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்