சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் சந்தானம் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா. கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் . இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டிரெய்லர் கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன், ஆனந்தராஜ், முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, அனகா, ஷிரின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
இந்த படத்திலிருந்து கடைகியாக வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. ஆம், இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு / ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால் தற்போது சந்தானம் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள். விரைவில் இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…