சூரரை போற்று படக்குழுவின் மாஸ் அப்டேட்!

சூரரை போற்று படக்குழுவின் மாஸ் அப்டேட்.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் சூரரை போற்று. இப்படம் இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிராகாஷ் இசையமைக்கிறார்.
இந்தப் படத்துக்காக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துடன் இணைந்திருப்பதாக முதல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அடுத்து இன்று மட்டும் 3 அப்டேட்கள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நாளை இரண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வெளியான இரண்டாவது அப்டேட்டில் படத்தில் இடம்பெற்றுள்ள வெய்யோன் சில்லி என்ற பாடலை நடுவானில் பறக்கும் விமானத்தில் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்,சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025