அருண் விஜய்யின் 33 வது படத்திற்கான மாஸ் அப்டேட்..?
அருண் விஜயின் 33 வது படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் தனது 33வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படம் ஹரிக்கு 16வது திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது.இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் ,யோகி பாபு,கேஜிஎஃப் பிரபலமான ராமசந்திரராஜூ , ராதிகா சரத்குமார்,ஜெயபாலன்,குக் வித் கோமாளி புகழ்,அம்மு அபிராமி ராஜேஷ் மற்றும் இமான் அண்ணாச்சி போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றார்கள்.
இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்திற்கான பூஜை இன்று தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பிற்காக ராமேஸ்வரம், ராம்நாடு, தூத்துக்குடி, காரைக்குடி மற்றும் சென்னை. ஆகிய மாவட்டங்களில் வருகின்ற 16 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.