தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் டிரைலரை கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன்,சாந்தனு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது .
தீபாவளி தினத்தன்று மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி இந்திய அளவில் சாதனை படைத்தது .இந்த படம் திரையரங்குகளில் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர் .மேலும் படம் ஜனவரி 13-ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது .
இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தின் டிரைலரை கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .மேலும் மாஸ்டர் படத்தின் ரிலீஸை தொடர்ந்து பார்வையாளர்களின் எண்ணிக்கை 75 சதவீதமாக உயர்த்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது . விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…
துபாய் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன்…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் (தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்)…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்…