வலிமை ஃபர்ஸ்ட் லுக் குறித்து வெளியான மாஸ் தகவல்..!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் வருகின்ற மார்ச் மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்.
நடிகர் அஜித் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது .
இந்த நிலையில் தற்போது அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த வலிமை படம் குறித்த அப்டேட்டை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் கடந்த 15 ஆம் தேதி அறிவித்தார். வலிமை படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டத்திலிருந்து ஒரு அப்டேட் கூட விடாததால் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் போன்றவர்களிடம் வலிமை அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் வந்தனர். அதனை தொடர்ந்து நடிகர் அஜித் வருத்தத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதன் பிறகு அவரது ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்காமல் வரவேண்டிய நேரத்தில் சரியாக வரும் என்று காத்துள்ளார்கள். இந்த நிலையில் தற்போது இதனை தொடர்ந்து வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் வருகின்ற மார்ச் மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025