கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிக்கும் விக்ரம் 60 படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் முதல் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ஆதித்யா வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் துருவ் விக்ரம் .ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை .அதனை தொடர்ந்து துருவ் விக்ரம் தனது தந்தையுடன் இணைந்து நடிக்கவுள்ளதற்கான படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் துருவ் விக்ரமுக்கு வில்லனாக விக்ரம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அனிருத் இசையமைக்கும் “விக்ரம் 60” படத்தினை செவன் க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது . இந்நிலையில் தற்போது இந்த படத்தினை குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.அதாவது இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் முதல் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . விக்ரம் தற்போது நடித்து கொண்டிருக்கும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் முடிய உள்ளதாகவும், அதனையடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் விக்ரம் 60 படத்திற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.அதனை தொடர்ந்து அவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…