தனுஷின் “D43” படம் குறித்து வெளியான மாஸ் தகவல்.! ரசிகர்கள் கொண்டாட்டம்.!
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள D43 படத்தின் பூஜையை டிசம்பர் மாதத்தின் இடையில் டெல்லியில் வைத்து நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும் ரிலீஸ்க்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்தில் நடித்து வருகிறார்.
அதை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் “D43” படத்தில் நடிக்கவுள்ளார் .அதன் பின் ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் அவர்களின் படத்தில் தனுஷ் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இதில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருந்தது.
மேலும் தனுஷின் இந்த ‘D43’ படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார் .இந்த நிலையில் தற்போது இந்த படத்தினை குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.அதாவது இந்த படத்தின் பூஜையை டிசம்பர் மாதத்தின் இடையில் டெல்லியில் வைத்து நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் , மேலும் படத்தின் படப்பிடிப்பை அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.