மசூத் அசார் விவகாரத்தில் வேறு நடவடிக்கை எடுக்க வாய்ப்பு!!! கவுன்சில் உயர் அதிகாரி!!
- மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா தடையை ஏற்க முடியாது என அமெரிக்க எம்.பி. பிராட் ஷெர்மேன் கூறியுள்ளார்.
- சீனா இப்படி தொடர்ந்து தடையை ஏற்படுத்தி வந்தால் பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள பிற உறுப்பு நாடுகள்.
- வேறு நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைமை உருவாகும் என பாதுகாப்பு கவுன்சில் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை தீர்மானம்செய்தனர் .
இந்த தீர்மானத்தை மேலும் ஆராய்வதற்கு அவகாசம் வேண்டும் என சீனா கடைசி நேரத்தில் தடுத்து விட்டது.மேலும் தீர்வு எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என சீனா கூறியுள்ளது.
இதுபோன்று கூறி தான் மூன்று முறை தடையை ஏற்படுத்தியது.மசூத் அசார் விவகாரத்தில் நான்காவது முறையாக சீனா இந்நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. இதன் காரணமாக அந்த தீர்மானத்தை 9 மாதங்கள் வரை கிடப்பில் போட முடியும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதிமுறைகள் அனைத்தும் மசூத் அசாருக்கு தடை விதிக்க பொருந்தும் என அமெரிக்கா கூறி உள்ளது
இப்போது மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா தடையை ஏற்க முடியாது என அமெரிக்க எம்.பி. பிராட் ஷெர்மேன் கூறியுள்ளார்.
இந்நிலையில் சீனா இப்படி தொடர்ந்து தடையை ஏற்படுத்தி வந்தால் பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள பிற உறுப்பு நாடுகள் வேறு நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைமை உருவாகும் என பாதுகாப்பு கவுன்சில் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.