ஓமன் நாட்டில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 6 இந்திய தொழிலார்கள் பலி!
ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு இருந்த 6 தொழிலாளர்கள் மண் சரிவு ஏற்பட்டு மண்ணில் புதைந்து இறந்துவிட்டதாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மஸ்கட் நகர், சீப் பகுதியில் நிலத்திற்கு அடியில் சுமார் 14 மீட்டர் ஆழத்தில் பைப் போடப்பட்டு மண்ணில் புதைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது அங்கு ஏற்பட்ட கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டு அந்த அந்த குழி மூடப்பட்டுவிட்டது. அந்த பணியில் ஈடுபட்டிருந்த 6 தொழிலாளர்களும் மண் சரிவில் சிக்கி உயிரிழந்துவிட்டனர்.
இவர்களின் உடலை 12 மணிநேர போராட்டதிற்கு பிறகு மஸ்கட் மீட்புப்படையினர் மீட்டனர். இவர்களின் அடையாளங்கள் கண்டு இவர்கள் யார் யார் என்கிற விவரம் விரைவில் வெளியிடப்படும் என் கூறப்படுகிறது.