கும்பகோணத்தில் மகாமக குளத்தில் வெகுச்சிறப்பாக மாசிமக திருவிழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு புகழ்பெற்ற கும்பகோணம் மகாமக குளத்தில் ஆண்டுதோறும் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று மாசி மக விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதே போல் இவ்விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாகவும் வெகுச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
நடப்பாண்டின் மாசிமகவிழாவை முன்னிட்டு கடந்த பிப்.28ந்தேதி முதல் ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கவுதமேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் ஆகிய 6 சிவாலயங்களில் 10 நாள் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. அதே போல் பாணபுரீஸ்வரர், கம்பட்ட விஸ்வநாதர், கொட்டையூர் கோடீஸ்வரர், சாக்கோட்டை அமிர்தகலசநாதர், ஏகாம்ப ரேஸ்வரர், நாகேஸ்வரர் ஆகிய 6 சிவன்கோயில்களில் மாசி மகமான நேற்று மட்டும் ஏகதின உற்சவமும் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து தீர்த்தவாரியும் நடைபெற்றது மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடினர்.தொடர்ந்து பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவமானது நடைபெற்றது.
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…
சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். வயது மூப்பு காரணமாக…
டொமிங்கோ : டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஒரு பிரபலமான ஜெட் செட் இரவு விடுதியின் கூரை…