பாரி வேட்டை..திருப்பரங்குன்றத்தில் கோலாகலம்

Default Image

திருப்பரங்குன்றம் கீழரத வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி சமேத குருநாதசுவாமி கோவில் உள்ளது.இந்த கோவில் ஆனது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலாகும்.ஆண்டுதோறும் மாசி சிவராத்திரி திருவிழா 5 நாட்கள் இக்கோவிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.அதே போல் இந்த ஆண்டிற்கான திருவிழாவானது பிப்., 21-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்ற கோவிலில் இருந்து அங்காள பரமேஸ்வரி சமேத குருநாதசுவாமி கோவிலுக்கு மேளதாளம் முழங்க தயார் அங்காள பரமேஸ்வரி புறப்பட்டு அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு தன் அருள்பார்வையால் ஆசிர்வதித்தார்.

இதன்பின் அங்காள பரமேஸ்வரி குருநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சர்வ அலங்காரம், தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்வான பாரிவேட்டை நேற்று நடைபெற்றது.

இந்த வேட்டைக்காக கிரிவலப்பாதையில் உள்ள காட்டு பேச்சியம்மன்கோவிலுக்கு பூப்பல்லக்கில் தயார் அங்காளபரமேஸ்வரி புறப்பட்டுச் சென்றார். பின்னால் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது வெண்கல மணியை அடித்தபடி வந்தனர். இதனால் கிரிவலப்பாதையே மணி ஓசையால் எதிர் ஒலித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்