வரலாறு படைத்த இந்தியாவின் வீரமங்கை…..6 வது முறை தங்கத்தை முத்தமிட்ட தங்கமகள்..!!
உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி மகளிருக்கான இந்த போட்டியில் இந்திய வீரமங்கை மேரி கோம் ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இந்திய தலைநகர் டெல்லியில் உலக குத்துச்சண்டைக் கூட்டமைப்பு சார்பில் இந்த போட்டிகள் நடைபெற்றன.இதில் மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவில் இறுதிச்சுற்று நடைபெற்றது.இதில் இறுதி போட்டிக்கு நுழைந்த மேரி கோம் மற்றும் உக்ரைனின் குத்து சண்டை வீரங்கனை ஹன்னா ஒஹட்டா ஆகியோர் களமிரங்கினர்.
தாய்நாட்டில் நடைபெறும் இறுதி போட்டியில் தனது ஆக்ரோசத்தை காட்டிய மேரி கோம் எதிர் வீரங்கனை ஒஹட்டாவை ஒரு புள்ளி கூட எடுக்கவிடாமல் 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தனது 6 வது வெற்றியை குத்துச்சண்டை உலகில் முத்தமிட்டார். மேலும் குத்துச்சண்டை வரலாற்றில் தன் பெயரையும் அழுத்தமாக எழுதியுள்ளார் மேரி கோம்.
இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து ஆறாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.6 முறை பட்டத்தை முத்தமிட்ட மேரி கோம் அதிக வெற்றிகளை குவித்த குத்துச்சண்டை வீரர்கள் பட்டியலில் கியூபா நாட்டு பெலிக்ஸ் சவொனுடன் இணைந்துள்ளார்.
வீரமங்கை மேரி கோம்மின் வரலாற்று வெற்றிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.இதன் முலம் இந்தியா மற்றும் குத்துச்சண்டை போட்டியில் தொடர்ந்து 6 முறை சாம்பியன் பட்டம் பெற்று வரலாறு படைத்துள்ளார் இந்தியாவின் வீர பெண் சிங்கம்.
DINASUVADU