அரைஇறுதியிக்குள் அடியெடுத்து வைத்து மேரி கோம் அசத்தல்
இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய உட்பட 16 நாடுகலை சேர்ந்த 200 வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.இந்திய தரப்பில் 38 வீரர்கள் மற்றும் 37 வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர்.
மேலும் அரைஇறுதிக்குள் இந்தியா சார்பில் 6 வீரர்கள், 4 வீராங்கனைகள் அரை இறுதி போட்டிக்குள் நுழைந்து பதக்கங்களை உறுதி செய்துள்ளனர்.
பதக்கத்தை உறுதி செய்த வீரர்கள் பட்டியல் ஆண்கள் குத்து சண்டை பிரிவில்:
81 கிலோ எடை பிரிவில் -பிரிஜேஷ் யாதவ் மற்றும் சஞ்சய்
91 கிலோ எடை பிரிவில் -நமன் தன்வார் மற்றும் சஞ்ஜீத்
91 கிலோ எடைக்கும் அதிகமான பிரிவில் -சதீஷ் குமார் மற்றும் அதுல் தாகூர்
ஆகியோர் அரை இறுதிக்குள் நுழைந்துள்ளனர்.
அதே போல் பெண்கள் பிரிவில் :
69 கிலோ எடை பிரிவில் – லவ்லினா போர்கோஹைன் மற்றும் அஞ்சலி
75 கிலோ எடை பிரிவில் -பாக்யபதி கச்சாரி மற்றும் சவீதி பூரா
ஆகியோர் அரை இறுதிப்போட்டிக்குள் தங்கள் பிரிவில் தகுதி பெற்று விளையாட உள்ளனர்.கடந்த முறை இந்த போட்டிகளில் ஆறு தங்க பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தியாவிற்கு குத்துச்சண்டை போட்டியில் தங்க பத்தக்கதை ஒரு தடவை அல்ல ஆறு முறை குவித்த தங்க மங்கை மேரி கோம் இதில் 51 கிலோ எடை பிரிவில் பங்கேற்றார். இதில் அவர் அரையிறுதி போட்டிக்கு
முன்னேறியுள்ளார்.மேரி கோம் அரையிறுதியில் தெலுங்கனா வீராங்கனை நிஹாத் ஜரீனை எதிர்கொள்கிறார்.இவர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரையிறுதியில் வெல்லப்போவது யார்..? என்ற கேள்விக்கு ரசிகர்களாகிய உங்களுடைய கருத்துகள் வரவேற்கப் படுகின்றன.