மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வேட்பாளர்களை அறிவித்துள்ளார்!!!
- மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மதுரை தொகுதியில் எழுத்தாளர் சு. வெங்கடேசனும் , கோவை தொகுதியில் முன்னாள் எம்பி பி.ஆர். நடராஜன் .
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியானது .அதில் தி.மு.க கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை மற்றும் மதுரை என 2 தொகுதிகள் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில் கோவை மற்றும் மதுரை போட்டியிடும் வேட்பாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அறிவித்தார்.
மதுரை தொகுதியில் எழுத்தாளர் சு. வெங்கடேசனும் , கோவை தொகுதியில் முன்னாள் எம்பி பி.ஆர். நடராஜனும் போட்டியிடுவார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக தலைவர் பாலகிருஷ்ணன் அறிவித்து உள்ளார்.