பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி,தனது அனைத்து கார்களின் விலையை மாடல்களை பொருத்து 0.9 சதவீதம் முதல் 1.9 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
தற்போது ஆல்டோ முதல் எஸ்-கிராஸ் வரையிலான பல்வேறு கார்களை விற்பனை செய்து வரும் நிறுவனம்,பல்வேறு உள்ளீட்டு செலவுகளின் அதிகரிப்பு காரணமாக விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும்,இந்த புதிய விலை உயர்வு நேற்று (18 ஏப்ரல்) முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதனிடையே,கடந்த ஏப்ரல் 6 அன்று,மாருதி சுசுகி நிறுவனம் கூறுகையில்: “கடந்த ஆண்டில்,பல்வேறு உள்ளீட்டு செலவுகள் அதிகரித்ததால்,நிறுவனத்தின் வாகனங்களின் விலை தொடர்ந்து மோசமாகப் பாதிக்கப்பட்டது.எனவே,விலை உயர்வின் மூலம் கூடுதல் செலவினங்களின் சில பாதிப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது இன்றியமையாததாகி விட்டது’,என்று கூறியிருந்தது. இந்நிலையில்,தற்போது அனைத்து மாடல் கார்களின் விலையை நிறுவனம் உயர்த்தியுள்ளது.
உள்ளீடு செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு,ஏற்கனவே ஜனவரி 2021 முதல் மார்ச் 2022 வரை வாகன விலைகளை சுமார் 8.8 சதவீதம் மாருதி சுசுகி நிறுவனம் உயர்த்தியுள்ளது.
இதற்கிடையில்,கடந்த வாரம் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் வாகனங்களின் விலையை 2.5 சதவீதம் அதிகரித்து ரூ.63,000 வரை விலையை உயர்த்தியது.அதைப்போல்,டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் ஏப்ரல் 1 முதல் அதன் மொத்த மாடல்களின் விலையை 4 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களான ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ ஆகியவையும் சமீபத்தில் விலை உயர்வை அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…
காத்மாண்டு : நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால்…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள்…
சென்னை : சீமான் வீட்டில் போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர்…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…