மிகவும் புகழ் பெற்ற சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.கோவில் சன்னதி விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டது. கிழக்கு ஏழுநிலை ராஜகோபுரம், ஐந்துநிலை கிழக்கு ரிஷிகோபுரம் மற்றும் மேற்கு ஐந்துநிலை மேற்கு கோபுரம் ஆகிய கோபுரங்களுக்கு திருப்பணி செய்யப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டு புதுப்போலிவுடன் காட்சியளிக்கிறது.
ஆலயத்தில் வீற்றிருக்கும் விஜயகணபதி மற்றும் சுப்பிரமணியர், மருந்தீஸ்வரர், திரிபுரசுந்தரி, தியாகராஜர், நடராஜர் சன்னதிகளிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது அனைத்து சன்னதி விமானங்களுக்கும் வண்ணம் தீட்டப்பட்ட நிலையில் இதுவரையில் ரூ.75 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் நிறைவடைந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து திரிபுரசுந்தரி உடனுறை மருந்தீசுவரர் மற்றும் பரிவார தெய்வங்கள் மற்றும் கோபுரங்களுக்கு கும்பாபிஷேக செய்வதற்கான பணிகள் தொடங்கி உள்ளது.பிப்.,1ந் தேதி மூர்த்தி ஹோமம் மற்றும் சாந்தி ஹோமம் ஆகியவை நடந்தது. பிப்.,2ந்தேதி கோ பூஜையுடன் கஜபூஜை, கன்யாபூஜை, சுமங்கலி பூஜை, கால பூஜைகள் ஆகியவைகள் நடந்தது
சரியாக இன்று காலை 7 மணிக்கு 6ம் கால அவபிருதகால யாகசாலை ஆனது பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவானது தியாகராஜர் திருக்கல்யாண வைபவம் நடக்க உள்ளது.கிழக்கு ராஜகோபுரம் வழியாகவும் பக்தர்கள், கட்டளைதாரர்கள், அபிஷேகதாரர்கள் , திருப்பணி உபயதாரர்கள் ஆகியோரும் மேற்கு ராஜகோபுரம் வழியாகவும் முக்கிய பிரமுகர்கள் கோவிலுக்குள் வந்து தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்காக 6 இடங்களில் குடிநீர் வசதி மற்றும் மாநகராட்சி மூலம் கழிப்பறை வசதியும் கூடுதலாக செய்யப்பட்டுள்ளது , சிறப்பு பஸ் வசதிகளும் செய்யப் பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்காக கோவில் வணிக வளாகத்திலும், கார்களை நிறுத்துவதற்கு கோவில் கல்யாண மண்டபப் பகுதிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…