12 ஆண்டுகழித்து மருந்தீஸ்வரர்க்கு குடமுழுக்கு…இன்று கோலகலமாக நடந்தது..!

Default Image
  • இன்று திருவான்மியூரில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் மருந்தீஸ்வரர்க்கு  12 ஆண்டு கழித்து  குடமுழுக்கு கோலகலமாக நடைபெற்றது.
  • பக்தர்கள் வெள்ளமென திரண்டு பங்கேற்றனர்.

 

மிகவும் புகழ் பெற்ற சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.கோவில் சன்னதி விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டது. கிழக்கு ஏழுநிலை ராஜகோபுரம், ஐந்துநிலை கிழக்கு ரிஷிகோபுரம் மற்றும்  மேற்கு ஐந்துநிலை மேற்கு கோபுரம் ஆகிய கோபுரங்களுக்கு திருப்பணி செய்யப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டு புதுப்போலிவுடன் காட்சியளிக்கிறது.

ஆலயத்தில் வீற்றிருக்கும் விஜயகணபதி மற்றும் சுப்பிரமணியர், மருந்தீஸ்வரர், திரிபுரசுந்தரி, தியாகராஜர், நடராஜர் சன்னதிகளிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது அனைத்து சன்னதி விமானங்களுக்கும் வண்ணம் தீட்டப்பட்ட நிலையில்  இதுவரையில் ரூ.75 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் நிறைவடைந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து திரிபுரசுந்தரி உடனுறை மருந்தீசுவரர் மற்றும் பரிவார தெய்வங்கள் மற்றும் கோபுரங்களுக்கு கும்பாபிஷேக செய்வதற்கான பணிகள் தொடங்கி உள்ளது.பிப்.,1ந் தேதி மூர்த்தி ஹோமம் மற்றும் சாந்தி ஹோமம் ஆகியவை நடந்தது. பிப்.,2ந்தேதி கோ பூஜையுடன் கஜபூஜை, கன்யாபூஜை, சுமங்கலி பூஜை, கால பூஜைகள் ஆகியவைகள் நடந்தது

சரியாக இன்று காலை 7 மணிக்கு 6ம் கால அவபிருதகால யாகசாலை ஆனது பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவானது தியாகராஜர் திருக்கல்யாண வைபவம் நடக்க உள்ளது.கிழக்கு ராஜகோபுரம் வழியாகவும் பக்தர்கள், கட்டளைதாரர்கள், அபிஷேகதாரர்கள் , திருப்பணி உபயதாரர்கள் ஆகியோரும் மேற்கு ராஜகோபுரம் வழியாகவும் முக்கிய பிரமுகர்கள்  கோவிலுக்குள் வந்து தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் வசதிக்காக 6 இடங்களில் குடிநீர் வசதி மற்றும்  மாநகராட்சி மூலம் கழிப்பறை வசதியும் கூடுதலாக செய்யப்பட்டுள்ளது , சிறப்பு பஸ் வசதிகளும் செய்யப் பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்காக கோவில் வணிக வளாகத்திலும், கார்களை நிறுத்துவதற்கு கோவில் கல்யாண மண்டபப் பகுதிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்