செவ்வாய் பெயர்ச்சி: இன்று துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்..!யாரெல்லாம் அதிர்ஷ்டம் பெற போகிறார்கள்..!

Published by
Sharmi

இன்று துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார் செவ்வாய் பகவான். 

கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இடம் பெயர்வது வழக்கம். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஞாயிற்று கிழமை (5 ஆம் தேதி) காலை 6.21 மணி அளவில் செவ்வாய் பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர உள்ளார். இவர் டிசம்பர் 5, 2021 முதல் ஜனவரி 15, 2022 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் விருச்சிக ராசியில் இருப்பார். செவ்வாய் பகவான் ஒருவரது ஆற்றல், வலிமை, ரத்த சார்ந்த விஷயங்களை கட்டுப்படுத்த கூடியவர். இவர் அமரும் இடமும், பார்க்கும் இடமும் பல்வேறு நன்மைகளை பெறுவார்கள். இதனால் 12 ராசிகளில் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்: உங்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி அனுகூலமான பலன் தரக்கூடியது. சகோதரத்துவ வகையில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கணவன், மனைவி பிரச்சனை படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் இதய தொடர்புள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் உணவில் கட்டுப்பாடு தேவை.

கடகம்: உங்களுக்கு இந்த பெயர்ச்சி மூலமாக சாதகமான பலன்கள் கிடைக்கும். சமூக ஊடகங்களில் தொடர்புடையவர்களுக்கு பல்வேறு வளர்ச்சி கிட்டும். உங்களின் மதிப்பு அதிகரிக்கும், பணவரவு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, வயிறு சார்ந்த பாதிப்பு ஏற்படலாம்.

சிம்மம்: பணவரவு உயரும். சமுதாயத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். இந்த இடப்பெயர்வு காலத்தில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் வளர்ச்சி அடைவார்கள். பணியில் இருப்பவர்கள் புதுமைகளை கற்றுக் கொள்வார்கள். உங்களுக்கு இது நல்ல காலமாக அமையும்.

கன்னி: செவ்வாய் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக அமைய உள்ளது. அதிகப்படியான பணவரவும், கிடைக்க வேண்டிய இடத்திலிருந்து பணம் கிட்டும். நண்பர்களிடம் இருந்த வேற்றுமை நீங்கி ஒற்றுமையாக இருப்பீர்கள். கணவன் மனைவி பிரச்சனை தீரும்.

விருச்சிகம்: உங்கள் ராசிக்கு இடம் பெயர உள்ள செவ்வாய் பகவான் உங்களுக்கு அனுகூலமான பலன்களை தரப்போகிறார். வருமானம் அதிகரிக்கும். கல்வியில் நல்ல மேம்பாடு அடைவீர்கள். உங்களுக்கு நல்ல காலம் வந்து விட்டது என்பதை உணர்வீர்கள். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். அலுவலகத்தில் நடப்பதை வெளியில் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பூர்வீக சொத்துக்கள் மூலமாக சாதகமான பலன்களை அடைவீர்கள்.

மகரம்: இந்த பெயர்ச்சி  காலத்தில் பல வித நன்மைகளை அடைய உள்ளீர்கள். உங்களின் நட்பு வட்டம் அதிகரிக்கும். சமூகத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். கிடப்பில் இருந்த பணிகள் அனைத்தும் இந்த காலத்தில் முடிவடையும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நிம்மதியும் அடைவீர்கள்.

கும்பம்: உங்கள் தொழிலில் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். முழு முயற்சி எடுத்தால் புதிய உயரங்களை அடையலாம். உத்தியோக வேலையில் இருப்பவர்கள் புதிய பொறுப்பு, பதவியை எதிர்பார்க்கலாம். இந்த காலத்தில் லாபம் ஈட்ட முடியும்.

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டங்களை பெறும் காலமாக அமையும். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். பயணங்கள் மூலமாக சாதகமான பலன் கிடைக்கும். தொழில் ரீதியான வாய்ப்புகள் அதிகரிக்கும். பெரிய மனிதர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கும். இயந்திரங்கள் தொடர்பில் சாதக பலன்கள் உண்டு.

Recent Posts

LSG vs DC : லக்னோவை பந்தாடிய டெல்லி கேபிட்டல்ஸ்! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி! 

LSG vs DC : லக்னோவை பந்தாடிய டெல்லி கேபிட்டல்ஸ்! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…

2 hours ago

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

4 hours ago

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

6 hours ago

பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…

6 hours ago

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

6 hours ago

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

7 hours ago