பூமியை நெருங்கும் செவ்வாய் கிரகம்! இன்று இரவு வானில் நிகழப்போகும் அரிய நிகழ்வு!
இன்று இரவு செவ்வாய் கிரகம், சூரியனை சுற்றி வரும் தனது பயணத்தின்போது, அதன் வட்டப்பாதையில் பூமிக்கு மிக நெருக்கமான இடத்தை அடைகிறது. பூமிக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையிலான தூரம் 6 கோடியே 20 கிலோமீட்டர் ஆகும்.
இந்த வானியல் நிகழ்வானது, இந்திய நேரப்படி இன்று இரவு 7:47 மணியளவில் நிகழவுள்ளது. இதற்க்கு பின், இந்த நிகழ்வானது 2035-ல் தான் நிகழும். மேலும், ஆண்டு இறுதிவரை சூரிய அஸ்தமனத்திற்கு பின், செவ்வாய் கிரகத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.