நடிகை வித்யுலேகா ராமனின் திருமண புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஜீவா, சமந்தா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் நீதானே என் பொன்வசந்தம். இந்த படத்தில் ஜென்னி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் வித்யுலேகா ராமன்.
இந்த படத்தை தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படத்தில் நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானார்.
இந்த படத்தை தொடர்ந்து விஜயின் ஜில்லா, அஜித்தின் வீரம், சூர்யாவின் மாஸ் என முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை வித்யுலேகா ராமன் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி ஃபிட்னஸ் நிபுணரான சஞ்சய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து தற்போது, திருமணத்தின்போது எடுக்கப்பட்ட கலக்கல் புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…