மாஸ்டர் தி பிளாஸ்டர் பாடகருக்கு திருமணம்.!
பிரபல பாடகரான பிஜார்ன் சுர்ராவ்வின் திருமணத்தில் இசையமைப்பாளர் அனிருத் தனது தம்பியுடன் கலந்துகொண்டுள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில்வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படமும் வெற்றியடைந்து படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் பலத்த வரவேற்பை பெற்றது.
குறிப்பாக படத்தில் இடம்பெற்ற ‘மாஸ்டர் தி பிளாஸ்டர்” பாடல் பலரது ரிங்டோனாக மாறியது எனவே கூறலாம். இந்நிலையில் மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற ‘மாஸ்டர் தி பிளாஸ்டர்’ பாடலை பாடிய பிரபல பாடகரான பிஜார்ன் சுர்ராவ் (Bjorn Surrao) வுக்கு இன்று திருமணம் நடந்துள்ளது. இவரது திருமணத்தில் இசையமைப்பாளர் அனிருத் தனது தம்பியுடன் கலந்துகொண்டுள்ளார்.