நடிகர் விஷ்ணு விஷாலுக்கு திருமணம் எப்போது தெரியுமா..??

Default Image

நடிகர் விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை ஏப்ரல் மாதம் இறுதியில் திருமணம் செய்துகொள்வதாக தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் காடன் என்ற திரைப்படம் வருகின்ற 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.மேலும் இவருக்கும் நடிகர் கே.நட்ராஜின் மகளான ரஜினி நடராஜ் என்பவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருணம் நடந்தது. திருமணம் ஆன சில ஆண்டுகளில் சில காரணங்களால் விஷ்ணு விஷால் விவாகரத்து செய்தார்.

இதனை தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை காதலிப்பதாக விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்தார். கடந்த ஆண்டு இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்று இணையத்தில் கேள்விகள் எழுந்து வந்த நிலையில் தற்போது அதற்கான பதிலை நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

இதில் பேசிய விஷ்ணு விஷால் அவருக்கும் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவிற்கும் வருகின்ற ஏப்ரல் மாதம் இறுதியில் திருமணம் நடைபெறவி ருப்பதாகவும், அதற்கான தேதியை விரைவில் அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Vijay -Parandur -Airport
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay