பிரிட்டனில் ஒரு தம்பதியினர் கடந்த 12 வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஏழு குழந்தைகள் உள்ளன. அதில் நான்கு பேர் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள். இந்நிலையில் ஒரு வருடத்திற்கு முன் இந்த குழந்தைகளின் தந்தைக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு பல்வேறு சிகிச்சைகள் கொடுக்கப்பட்டது ஆனாலும் புற்றுநோய் குணமடையவில்லை. இதனால் அவரின் நாக்கு 90% அகற்றப்பட்டது. பின்னர் அவரது கால்களின் தோல்களை கொண்டு மருத்துவர்கள் பேசுவதற்கு செயற்கையாக நாக்கை ஒட்டவைத்தனர். இந்நிலையில் இன்னும் சில மாதங்களில் இந்த குழந்தைகளின் தந்தை இறந்துவிடுவார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் திருமணம் செய்து கொள்ளாமல் 12 வருடங்களாக வாழ்ந்து வந்த இந்த தம்பதி தங்கள் 7 குழந்தைகளின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் பேசிய அப்பெண், எங்களுடைய குழந்தைகள் நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்று அடிக்கடி கேட்பார்கள்.
ஆனால் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் நாங்கள் திருமணம் செய்துகொள்வோம் என்று எதிர்பார்க்கவில்லை. எனது கணவருக்கு குடிப்பழக்கம் , புகைப்பிடிக்கும் பழக்கம் கிடையாது ஆனால் அவரை புற்றுநோய் தாக்கியுள்ளது என கவலையுடன் கூறினார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…