சித்ராவின் மறைவு குறித்து ஹேய்நாத்திடம் நடத்திய விசாரணையில் சித்ராவும் ,நானும் இரண்டு மாதங்களுக்கு முன்பு பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சித்ரா .இவர் சீரியலில் நடிப்பதற்காக தனது வருங்கால கணவரான ஹேம்நாத் உடன் சென்னை அருகிலுள்ள நாஙரேத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார் . இவருக்கும் ஹேம்நாத் என்பவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதும், ஜனவரியில் திருமணம் நடத்த முடிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று அதிகாலை தூக்கில் தொங்கிய படி சித்ராவின் சடலம் மீட்கப்பட்டது . போலீசார் சடலத்தை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .சித்ரா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற விசாரணையை போலீசார் பல கோணங்களில் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் சித்ராவுடன் அறையில் தங்கியிருந்த ஹேம்நாத்துடன் நடத்திய விசாரணையில் அவருக்கும் ,சித்ராவுக்கும் ஏற்கனவே திருமணம் நடந்ததாக தெரிவித்துள்ளார்.அதாவது கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சித்ராவை தான் பதிவு திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.மேலும் அவர் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், படப்பிடிப்பு முடித்து விட்டு குளிக்க செல்வதாக கூறி விட்டு தன்னை அறையிலிருந்து வெளியேற்றியதாகவும் ,வெகு நேரமாகியும் கதவை திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் கூறி மாற்று சாவி உபயோகித்து திறந்த போது தூக்கில் தொங்கியப்படி கண்டதாகவும் கூறியுள்ளார் .ஆனால் இதுகுறித்து போலீசார் கூறிய போது இருவருக்கும் திருமணம் நடந்ததற்கான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே திருமணமானது உறுதி செய்ய முடியும் என அறிவித்துள்ளார் .
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கிறார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர்…
சென்னை : மத்திய அரசு பரந்தூர் பகுதியில் புதியதாக விமான நிலையம் ஒன்றினை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு…
சென்னை : இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சிம்புவை…
சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது www.tnpsc.gov.in…
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…