மத்திய அமெரிக்காவில் நடைபெற்ற ஒரே பாலின ஜோடிகளின் திருமணம்.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் மக்கள் பீதியடைந்துள்ள நிலையில், மத்திய அமெரிக்காவின் கோஸ்டாரிகாவில் முதன்முறையாக ஒரே பாலின ஜோடிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. ஒரே பாலின திருமணமானது, ஈக்வடார், அர்ஜென்டினா மற்றும் பிரேசில்போன்ற நாடுகளில் சட்ட பூர்வமான நிலையில், மத்திய அமெரிக்காவின் கத்தோலிக்க கோஸ்டாரிகா நாட்டிலும் இச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று கோஸ்டாரிகாவில் முதல் ஒரே பாலின திருமணம் நடைபெற்றது. ஒரே பாலினத்தை சேர்ந்த டரிட்ஸா அராயா மற்றும் அலெக்ஸாண்ட்ரா குய்ரோஸ் ஆகிய இரு பெண்களும் சட்டப்படி திருமணம் பதிவு செய்துள்ளனர். இவர்களது திருமணம், ஆன்லைனில் அல்லது அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட நிலையில், முகநூல் பக்கத்தில், 20,000 பேர் இந்த திருமணத்தை பார்த்துள்ளனர்.
மேலும், அமெரிக்காவில் பல லட்சம் பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களது திருமணம் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது.
சென்னை : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி, வெற்றி…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…