ஊழல் புகாரில் சிக்கிய பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகர்பர்க்… 6 மணி நேர விசாரணையில் சிக்கினார்.!
கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, பேஸ்புக் நிறுவனம் தனது குறிப்பிட்ட பயனர்களின் தரவுகளை தவறாக பயன்படுத்தியதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகர்பர்க் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பான விசாரணை அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கேம்பிரிட்ஜ் அனலிடிக் ஊழல் என கூறப்படும் இந்த ஊழல் வழக்கில் விரைவில் மார்க் ஸுகர்பர்க் 6 மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என கூறப்படுகிறது.
அவ்வாறு அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒருவேளை மார்க் ஸுகர்பர்க் தனது பதவியில் இருந்து கீழிறக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது.