பேஸ்புக் ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட MARk zuckerberg

Default Image

பேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் இனி வீட்டில் இருந்தே பணிபுரியலாம் என அந்நிறுவனத்தின் C.E.O MARk zuckerberg அறிவித்துள்ளார்.

உலகளவில் பரவி வரும் கொரோனா வைரஸானது, தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி வருகிறது. இந்நிலையில், அனைத்து நாடுகளிலேயும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா அச்சறுத்தல் காரணமாக எல்லா நிறுவங்களிலும் வேலை செய்யும் ஊழியர்கள் தங்களது வீட்டில் இருந்தே  வேலை செய்து வருகிரார்கள். உலகின் மிகப் பெரிய சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் கடந்த 2 மாதங்களாக அலுவலகத்திற்கு வராமல் வீட்டிலிருந்தே வேலை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் ஊழியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க 5 அல்லது 10 ஆண்டுகள் வரை அவர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என பேஸ்புக் நிறுவனத்தின் C.E.O மார்க் ஜுக்கர் பெர்க் அறிவித்துள்ளார். இதனிடையே, பேஸ்புக் நிறுவனத்தில் 8 ஆயித்துக்கும் அதிகமான நபர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் அடுத்த 5 வருடங்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவர்கள் அனைவரும் வேலை செய்யும் இடத்திக்கேற்ப சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்