இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற அருமையான படத்தை இயக்கி அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனுஷை வைத்து கர்ணன் என்ற தரமான படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் மாரி செல்வராஜ் நடிகர் துருவ் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
இந்த நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் , இயக்குனர் மாரி செல்வராஜ் நடிகர் துருவ் விக்ரம் படத்தை இயக்கவிட்டு அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 40 படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடி வாசல் படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…