மாரி செல்வராஜ் – உதயநிதி ஸ்டாலின் படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்.?!

Published by
பால முருகன்

மாரி செல்வராஜ் – உதயநிதி ஸ்டாலின் படத்தில் பிரபல மலையாள நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல். 

இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து துருவ் விக்ரம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் வைத்து இரண்டு படங்களை இயக்கவுள்ளார். இதில் முதலில் உதயநிதி ஸ்டாலின் வைத்து படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும், படத்தில் வடிவேலுவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகி பரவியது.

இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், மாரி செல்வராஜ் – உதயநிதி ஸ்டாலின் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் மலையாள நடிகர் பகத் பாசில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் பஹத் பாசில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தார் . தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தில் நடித்துவருகிறார்.

தமிழில் அவரது நான்காவது படமாக மாரி செல்வராஜ் படம் இருக்கும். உதயநிதி தற்போது கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ஒரு படத்திலும், ஆர்டிகிள் 15 இந்திப் படத்தின் ரீமேக்கிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

டானா புயல் எப்போது கரையை கடக்கும்? இந்திய வானிலை மையம் அலர்ட்!!

ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…

56 mins ago

கனமழை எதிரொலி : குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு! சுற்றுலா பயணிகளுக்கு குளிக்கத் தடை!

தென்காசி : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.…

57 mins ago

இதை யாரும் எதிர்பாக்கல..! 7 புதிய சேவைகளுடன்… புதிய லோகோவில் BSNL..!

டெல்லி : அரசாங்கத்திற்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) நிறுவனம் தனது பழைய லோகோவை மாற்றி புதிய…

2 hours ago

சளி ,இருமல் ,உடல் வலியை குணமாக்கும் சுக்கு பால் செய்யும் முறை..!

சென்னை -தீராத நெஞ்சு சளி மற்றும் ஜலதோஷத்திற்கு ஏற்ற பாரம்பரியமிக்க சுக்குபால்  செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்…

2 hours ago

16வது பிரிக்ஸ் மாநாடு : ரஷ்யா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

கசான் : 16-வது ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று ரஷ்யாவில் உள்ள கசான் நகரில் தொடங்கி வரும் அக்.-24-ம்…

2 hours ago

“கேப்டனிடமிருந்து சுதந்திரம் தேவை”..ரோஹித் சர்மா கொடுக்கிறாரா? முகமது ஷமி பேச்சு!

பெங்களூர் : நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி…

2 hours ago