மாரி செல்வராஜ்-துருவ் கூட்டணியில் உருவாகும் படம் இந்த விளையாட்டு வீரரின் கதையா.?
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படமானது கபடி வீரரான மனத்தி கணேஷன் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் பயோபிக் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆதித்யா வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் துருவ் விக்ரம்.அதன் மூலம் அதிக பெண் ரசிகர்களை கவர்ந்த இவர் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தந்தையான விக்ரமுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
அதன் பின் இவர் பரியெறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாகவும் ,அதனை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலிம் புரொடக்ஷன் தயாரிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது .
விளையாட்டு சம்மந்தமாக உருவாகும் இந்த படத்தில் கிராமப்புறத்தை சேர்ந்த ஒரு தமிழ்நாட்டு கபடி வீரராக துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.இந்த நிலையில் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் திரைப்படம் கபடி வீரரான மனத்தி கணேஷன் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.இருப்பினும் இதுவரை துருவ் விக்ரமை ஸ்டைலிஷ் நடிகராக பார்த்த நிலையில் இந்த திரைப்படத்தில் அவரை வெவ்வேறு கோணத்தில் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.