மார்கழி மாதம் நாம் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளோம். அதற்கு அறிவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் பல காரணங்கள் உள்ளது. ஆன்மிக ரீதியாக தேவலோகத்தின் விடியற்காலை நேரம் தான் மார்கழிமாதம் . ஆதலால் நாம் மார்கழி மாதம் விடியற்காலையில் எழுந்து விடியற்காலையில் எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று வேண்டுகையில், கடவுள் அதிகாலையில் பக்தர்கள் வேண்டுவதை உடனே நிறைவேற்றுவார் எனபது ஐதீகம். அதனால் தான் பெரும்பாலானோர் மார்கழி மாதம் காலையில் கோவிலுக்கு செல்வதை வைத்துள்ளோம்.
அதேபோல, மார்கழி மாதம் வீட்டு கன்னிப்பெண்கள் வீட்டு வாசலில் கோலம் போட்டு அதில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து பூசணி பூவை அதில் வைப்பார்கள். அதற்கும் ஒரு காரணம் உண்டு. அதாவது வீட்டில் உள்ள கன்னி பெண்கள் மட்டுமே முன் காலத்தில் வீட்டு வாசலில் கோலம் போட்டு வந்தனர். உற்றார் உறவினர்கள் அதனை வைத்துதான் இந்த வீட்டில் கல்யாணம் ஆகாத கன்னி பெண் இருக்கிறாள் என கண்டறிந்து மாப்பிள்ளை வீட்டார் பெண் கேட்க செல்வார்களாம்.இந்த திருமணம் தை மாதம் கைகூடும் என்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
இதற்கு அறிவியல் ரீதியாக காரணம் கூற வேண்டுமென்றால், மார்கழி மாதம் காற்றில் அதிகஅளவு ஆக்சிஜன் வாயு ஆனது அதிக அளவில் இருக்கும். அந்த மார்கழி மாதத்தில் விடியற்காலையில் எழுந்து காற்றில் உள்ள அதிகமான ஆக்ஸிஜனை சுவாசித்தால், அந்த ஒரு வருடத்திற்கான ஆக்சிஜனானது அந்த ஒரு மாதத்தில் கிடைத்துவிடுமாம். இதனால் முகப்பொலிவு இருக்குமாம். நம் உடலுக்கும் ஆரோக்கியமாக இருக்கும்.
மேலும், மார்கழி மாதம் அதிகாலையில் பெண்கள் எழுந்து அந்த சுத்தமான காற்றை சுவாசித்தால் அவர்கள் முகம் பொலிவுறும். மாப்பிள்ளை வீட்டார் வந்து பார்த்தவுடன் பெண்ணை மிகவும் பிடித்துவிடுமாம். இதனால் திருமணம் கைகூடும்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…