மார்கழி மாத சிறப்பியல்புகள்! அறிந்ததும்! அறியாததும்!
- மாதங்களில் மார்கழி மாதம் மிகவும் சிறந்த மாதம். அதனால்தான் மார்கழி பீடு என கூறப்படுகிறது.
- மார்கழி மாதம் ஆக்சிஜனின் அளவு அதிகமாக இருப்பதால் விடியற்காலை ஏழுவது உடல் நலனுக்கு மிகவும் நல்லது.
மாதங்களில் மார்கழி மாதத்திற்கு தனிச்சிறப்புகள் உண்டு. அந்த மாதம் மார்கழி பீடு என கூறப்படுகிறது. ஆனால், சிலரோ மார்கழி மாதம் பீடை மாதம் அந்த மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது. நிலத்தில் எந்தவிதையையும் விதைக்கக்கூடாது என கூறி வருவர். ஆனால் மார்கழி மாதத்திற்கு உண்மையான பெயர் மார்கழி பீடு என்பதாகும். பீடு என்பதற்கு கம்பீரமான, தனி சிறப்புள்ள என பல பொருள் உள்ளது.
மார்கழி மாதத்தில் உயிர் உருவாகும் தன்மையானது மிகவும் குறைந்து காணப்படும். அதனால்தான் மார்கழி மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது என முன்னோர்கள் கூறிவந்தனர். அதேபோல, மார்கழி மாதம் மிகவும் குளிர்ந்த காலம் என்பதால், மண்ணில் போட்ட விதை முளைத்து வர தாமதமாகும். அதனால் விதைக்க கூடாது எனவும் கூறி வந்தனர். இதுதான் உண்மையான காரணம்.
மார்கழி மாதம் அதிகாலையில் வீட்டு பெண்கள் எழுந்து வீட்டு வாசலில் கோலம் போடுவதும், வீட்டில் உள்ள ஆண்கள் அதிகாலை எழுந்து ,குளித்து கோயில் செல்வதும் ஒரு வழக்கமாக இருந்து வந்தது. அதற்கு காரணம் மார்கழி மாதத்தில் அதிகமான ஆக்சிஜன் வாயு வெளியாகும்.
அதனை வீட்டில் உள்ள பெண்கள் சுவாசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதிகாலையில் எழுந்து கோலம் போடுவதை வழக்கமாக வைத்தனர். அதேபோல, ஆண்களும் சுவாசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு பஜனைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.
தற்காலத்தில் பலர் விடியும் முன்னரே அதாவது முந்தைய நாள் இரவே கோலம் போட்டு வைத்து விடுகின்றனர். அது தவறான விஷயமாகும். அதிகாலை 4 மணிக்கு எழுந்து வாசல் தெளித்து கோலம் போட வேண்டும். அதுவே பெண்களுக்கு மிகுவும் நல்லது. அதேபோல அதிகாலையில் கடும் குளிரை எதிர்த்து குளிர்ந்த நீரில் குளித்து கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தால், அவர் வாழ்வில் வரும் எந்தவித இடர்பாடுகளையும் எதிர்த்து போராடி வாழ்வில் வெற்றி பெறுவதற்கு ஒரு உந்து சக்தியாக அமையும் எனவும் நம்பப்படுகிறது. இதுவே உண்மையான மார்கழி மாத சிறப்பியல்புகளாகும்.