மாறன் சகோதரர்கள் ஊழல் வழக்கு விமர்சனத்திற்கு உள்ளாகும் சிபிஐ நீதிமன்ற தீர்ப்பு…!!
தயாநிதி மாறன் மத்திய தொலை தொடர்பு அமைச்சராக பதவி வகித்த காலத்தில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவருடைய வீட்டில் திருட்டுத்தனமாக 700 தொலை தொடர்பு இணைப்புக்களை ஏற்படுத்தி தனது சகோதரர் கலாநிதி மாறனின் சன் நியூஸ் தொலைக் காட்சிக்கு வர்த்தக வசதிகள் செய்து கொடுத்தார் என்றும் இதன்காரணமாக பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு 1.78 கோடி ருபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் சி.பி.ஐ குற்றம் சாட்டி விசாரணை மேற்கொண்டு வழக்கும் தொடுத்தது. ஆனால் இந்த குற்றசாட்டை நிரூபிக்க சி.பி.ஐ தவறி விட்டதாக கூறி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கிலிருந்து மாறன் சகோதரர்களை இன்று விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. ஏர்செல் மேக்சிஸ் வழக்குக்கு பிறகு சி.பி.ஐ. அதிகாரிகளை எளிதில் விலைக்கு வாங்க முடியும் என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.