தற்போதைய காலகட்டத்தில் கல்வி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த பெற்றோர்கள் எவ்வளவோ முயன்று வருகிறார்கள். சில நேரம் மாணவர்கள் ஞாபக சக்தி குறைபாட்டால் மிகவும் பாதிக்கப்பட்டு அதனால் அவர்கள் கல்வியில் முன்னேற்றம் இல்லாமல் மந்தமாக காணப் படுகிறார்கள்.
இந்த பிரச்சனை பெற்றோர்களுக்கு மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. மாணவர்களின் ஞாபக சக்தியை மீட்டு அவர்களின் கல்வித் திறன் மேம்படும் வகையில் திகழ மரகத விநாயகருக்கு தேன் அபிஷேகம் செய்தால் போதும். அந்த வழிபாட்டை எவ்வாறு செய்வது என தற்போது பார்க்கலாம்.
எந்த ஒரு விஷயத்துக்கும் முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட்டு அந்த செயலை தொடங்கினால் அந்த செயல் வெற்றியில் முடியும். எப்படிப்பட்ட தோஷத்தையும் நீக்கும் சக்தி விநாயகருக்கு கொண்டு பச்சை நிறத்தில் உள்ள மரகத விநாயகரை நம் வீட்டில் வாங்கி வைத்து அவருக்கு சுத்தமான மலை தேன் அபிஷேகம் செய்ய வேண்டும். அப்படி அபிஷேகம் செய்யப்பட்ட தேனை சேகரித்து வைத்து அந்த தேனை துளசி இலையில் எடுத்து, வில்வ இலையின் மீது வைத்து அதனை குலைத்து உங்கள் பிள்ளைகளின் நாவில் தினந்தோறும் தடவி வர வேண்டும்.
இந்த மலைதேன் துளசி வில்வ இலை இவை பிள்ளைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் மருத்துவ குணம் கொண்டது. அதிலும் விநாயகருக்கு அபிஷேகம் செய்த தேன் தெய்வீக சக்தி கொண்டது. இவ்வாறு பூஜை செய்ய முடியாதவர்கள் அருகில் உள்ள பழமையான சிவன் கோவிலுக்கு சென்று அங்கு உள்ள லிங்கத்திற்கு தேனபிஷேகம் செய்து அந்த தேனை சேகரித்து மேற்கண்டவாறு செய்து பிள்ளைகளுக்கு கொடுக்கலாம்.
இதன் மூலம் உங்கள் பிள்ளைகளின் கல்வி தோஷம் நீங்கும். அவர்கள் தங்களை அறியாமலேயே படிப்பில் ஆர்வத்தோடு ஈடுபடுவதை நீங்கள் உணரமுடியும். பிள்ளைகளின் கல்வி பற்றிய கவலை நீங்கி பெற்றோர்கள் நிம்மதி அடையலாம்.
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…