காஸாவின் முக்கிய நகரத்தை தாக்கிய இஸ்ரேலிய இராணுவம்.. ஏராளமானோர் பலி!

Khan Younis

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய 63-வது நாளான இன்றும் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தாக்குதலால் சுமார் 1400 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், பதிலுக்கு இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகரில் நடத்திய கடுமையான தாக்குதல் 14 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்த தாக்குதலால் பொதுமக்கள், குறிப்பாக காசா நகரத்து பாலஸ்தீன மக்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் தாக்குதலால் ஆயிரக்கணக்கானோர் அப்பகுதிகளை விட்டு வெளியேறினர்  இதன் காரணமாக இரு தரப்பும் போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு நாடுகள் வலியுறுத்தியது.

இறுதியில் அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாட்டின் மத்தியஸ்தலத்தை அடுத்து கடந்த வாரம் 7 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது. இரு தரப்பில் இருந்தும் பிணை கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது தான் இந்த போர் நிறுத்தத்தின் முக்கிய நோக்கம் என கூறப்பட்டது. அதன்படி, இதுவரை 110 இஸ்ரேல் பிணை கைதிகளை ஹமாஸ் அமைப்பினரும், 240 பிணை கைதிகளை இஸ்ரேல் ராணுவமும் விடுவித்து உள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் நாளொன்றுக்கு 10 பிணை கைதிகளை விடுவிப்பதாக கூறப்பட்ட நிலையில், ஆனால் ஹமாஸ் அமைப்பினர் அதனை மீறி 8 பேரை மட்டுமே விடுவித்ததக குற்றம் சாட்டி இருந்தது. இந்த சூழலில், கடந்த சில நாட்கள்  முன்பில் இருந்து காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதலை நடத்தி கொண்டு வருகிறது.

இலங்கையில் பிறப்பு சான்றிதழில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றம்..!

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேல் ராணுவம் மீது தாக்குதல் நடத்தியது. வான்வெளி தாக்குதலை தொடர்ந்து தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் ராணுவம் தொடங்கியதாக தகவல்கள் வெளியாகின. ஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒரு வார கால போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர், மீண்டும் தாக்குதல் நடந்து வருகிறது.  இஸ்ரேலிய தாக்குதலில் காசாவில் 178 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், இஸ்ரேலிய இராணுவம் தெற்கு காஸாவின் முக்கிய நகரமான கான் யூனிஸ் நகரத்தின் மீது போர் விமானங்களுடன் நுழைந்து, தாக்குதல் நடத்தியதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் ஐந்து வாரங்களுக்கு முன்பு ஹமாஸ் அமைப்பினரை அகற்றுவதற்கான இஸ்ரேல் ராணுவம் தரைவழிப் படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து தற்போது நடந்துள்ளது கடுமையான தாக்குதல் என கூறப்படுகிறது.

தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸின் மையப்பகுதியை அடைந்து நகரை சுற்றி வளைத்ததாக இஸ்ரேல் அறிவித்தது. அப்போது, ஆயுதப் பிரிவான அல் கஸ்ஸாம் பிரிகேட்ஸ், அதன் போராளிகள் இஸ்ரேலியர்களுடன் மோதலில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர். ஹமாஸின் ஆயுதப் பிரிவு, 8 இஸ்ரேலிய துருப்புக்களைக் கொன்றதாகவும்,  24 இராணுவ வாகனங்களை அழித்ததாக தெரிவித்துள்ளது.

அதுபோன்று, கான் யூனிஸின் வடக்கே டெய்ர் அல்-பாலாவில் உள்ள வீடுகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அங்குள்ள ஷுஹாதா அல்-அக்ஸா மருத்துவமனையின் தலைவர், குறைந்தது 45 பேர் உயிரிழந்ததாக கூறியுள்ளார். இதனால், இறப்புகள் அதிகரித்து வருவதால் தாக்குதலை நிறுத்த அமெரிக்கா மீண்டும் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்