கொரோனா வைரஸ் தொற்றால் உலக வல்லரசு நாடு என கூறப்படும் அமெரிக்கா தற்போது மிகுந்த பாதிப்புள்ளாகி வருகிறது. இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக அங்கு பலரும் தங்களது வேலைகளை இழந்துள்ளனர்.
இதுவரை 5 கோடி பேர் தங்களது வேலையை இழந்துள்ளனராம். இதில் லட்சக்கணக்கான இந்தியர்களும் உள்ளனராம். வெளிநாட்டில் இருந்து அமேரிக்கா சென்று வேலைபார்ப்பவர்களில் 67 சதவீதத்தினர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் வேலை செய்வதற்கு வெளிநாட்டினர் எச்.1.பி விசா எடுத்து 3 ஆண்டுகள் வரை வேலை செய்துகொள்ளலாம். அடுத்த 3 ஆண்டுகள் கழித்து மீண்டும் புதுப்பித்துக்கொள்ளலாம். வேலையின்றி அமெரிக்காவில் 60 நாள் மட்டுமே தங்கயிருக்க முடியும். அதற்க்குள் நாடு திரும்பிவிட வேண்டும். இந்த நீட்டிப்பு காலத்தை 90 நாட்களாக அதிகரிக்க தற்போது வேலை இழந்த இந்தியர்கள் அமெரிக்க அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவால் இதுவரை 5 கோடி பேர் வேலையிழந்துள்ளதை அடுத்து இம்மதத்திற்குள் அந்த எண்ணிக்கை 7 கோடியாக இருக்கும் எனவும், 2 ஆம் உலகப்போருக்கு பின்னர் அமெரிக்காவில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார பின்னடைவு இதுதான் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…